• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

எதற்கும் துணிந்தவன் – பொள்ளாச்சி சம்பவம் கதையா?

என் கூட இருக்கிறவங்க எதுக்கும் பயப்படக் கூடாது என டீசரின் சூர்யா பேசுவது முதல் அந்த அண்ணே வாய்ஸ் வரை எதற்கும் துணிந்தவன் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் படம் வரும் மார்ச் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், அதற்கான புரமோஷனாக எதற்கும் துணிந்தவன் டீசரை சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. கையில் வாளுடன் சூரசம்ஹாரம் செய்ய நடிகர் சூர்யா தயாராகி விட்டார் என்பது டீசரின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தெளிவாகத் தெரிகிறது.

டீசரில் இடம்பெற்ற அந்த அண்ணே வாய்ஸ் மற்றும் டீசரின் இறுதியில் ஒரு பெண் சூர்யா அருகே நின்றிருக்க அவருக்காக மற்றவர்களை அடித்துப் புரட்டியெடுக்கும் சூர்யாவின் ஆக்‌ஷன் பிளாக்குகளை பார்த்தால், பொள்ளாச்சியில் இளம்பெண்களை துன்புறுத்தி ஆபாசமாக வீடியோ எடுத்த கதையை தான் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி உள்ளாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

டீசரின் ஒரு காட்சியில் மூன்று இளைஞர்கள் செல்போனை பார்க்கும் காட்சியும், கம்ப்யூட்டரில் வாய்ஸ் அனலைஸ் பண்ணுவது போன்ற ஒரு காட்சியும் இடம்பெற்றிருக்கிறது. அந்த மூவரில் வடசென்னை மற்றும் நெற்றிக்கண் நடிகர் சரண் தெளிவாக தெரிகிறார். பிக் பாஸ் சிபியும் இந்த படத்தில் வினய் உடன் அமர்ந்திருக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. மாஸ்டர் படத்தில் ஹீரோவுடன் இருந்த சிபி இந்த படத்தில் வில்லன் உடன் உள்ளார்.

சாக்லேட் பாய் ஹீரோவாக நடித்து வந்த ‘உன்னாலே உன்னாலே’ வினய் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் செம ஸ்மார்ட்டான வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்திலும் அவர் தான் இன்பா எனும் கதாபாத்திரத்தில் மிரட்டல் வில்லனாக நடித்துள்ளார்.

வில்லன் மட்டுமில்லை எதற்கும் துணிந்தவன் படத்தின் ஹீரோயின் பிரியங்கா அருள் மோகனும் டாக்டர் படத்தில் நடித்தவர் தான். இவ்வாறு பல சஸ்பென்ஸ்களை கொண்டுள்ளது எதற்கும் துணிந்தவன் படம் குறித்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்!