• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

தளபதி 66 பட வாய்ப்பு எந்த ஹீரோயினுக்கு?

விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். விஜய்யின் 66வது படமாக உருவாக உள்ள இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் பயங்கர அதிருப்தியில் இருந்த பூஜா ஹெக்டே தனக்கு ஸ்கோப் குறைவாக இருப்பதாக மிகவும் வருத்தத்துடன் விஜய்யிடம் கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது!

இதனால் விஜய் தன்னுடைய அடுத்த படத்தில் பூஜா ஹெக்டேக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளாராம். அதன்படி வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 66 படத்தில் பூஜாவுக்கு வாய்ப்பு கொடுக்க விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழு தரப்பில் ராஷ்மிகாவை முடிவு செய்துள்ளார்களாம்.

இதனால் யார் ஹீரோயின் என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். மேலும் சிலர் தளபதி 66 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதால், இவர்கள் இருவருமே நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். எனவே இந்த படத்திலாவது பூஜா ஹெக்டே ஆசை நிறைவேறுகிறதா என்பதை பார்ப்போம்.