

பாலிவுட் நடிகை சன்னி லியோன் நேற்று யாரோ தனது பான் கார்டைப் பயன்படுத்தி ரூ.2,000 கடன் வாங்கியதாக குற்றம் சாட்டி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
சமீபகாலமாக கடன் மோசடி வழக்குகள் அதிகரித்து வருகின்றன. சாதாரண மக்கள் மட்டுமின்றி, பல முக்கிய துறைகளை சார்ந்த பிரபலங்களும், இவ்வகையான மோசடிகளில் சிக்கி வருகின்றனர்.. அந்த வரிசையில் தற்போது, நடிகை சன்னி லியோன் தானும் கடன் மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்வீட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடையாளம் தெரியாத யாரோ தனது பான் கார்டை பயன்படுத்தி கடன் வாங்கியதாகவும், கடன் எதற்கு என்று கூட தெரியவில்லை என்றும், இது தனது CIBIL மதிப்பெண்ணில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.