• Tue. Feb 24th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

வரதராஜ பெருமாள் கோயிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு!…

By

Aug 18, 2021

ஏகாதசியை முன்னிட்டு தேனி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மூலவராக வீட்டிருக்கும் வரதராஜ பெருமாள் பூதேவி, தேவி சமேதரராய் உள்ளனர். ஏகாதசியை முன்னிட்டு பால், பன்னீர், தேன், இளநீர் , சந்தனம், கனி வகைகள், திருமஞ்சனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

வரதராஜ பெருமாளுக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை மற்றும் பஞ்சமுக கற்பூர ஆராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வரதராஜ பெருமாளை வழிபட்டனர்.