தமிழக அரசின் தொழில்துறை நிறுவனமான தமிழ்நாடு சிமிண்ட்ஸ் ஆலங்குளம் சிமிண்ட் ஆலை விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 1971 ல் இருந்து இயங்கி வருகிறது. சுமார் 3500 ஏக்கர் வரை தேவையான சுண்ணாம்புக் கற்கள் நிலங்கள் உள்ளது. தற்சமயம் சுமார் 750 ஏக்கர் போக 2750 ஏக்கர் இருப்பில் உள்ளது. இன்னும் 75 ஆண்டுகளுக்கு தேவையான சுண்ணாம்பு கற்கள் இருப்பில் உள்ளது.

இந்த ஆலையை நவீனப் படுத்த பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றும் இதுவரை எந்த ஒரு முயற்சியும் பலன் அளிக்கவில்லை. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதிகாரிகள் நேரடியாகவும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலை பார்த்து வந்தனர்.
காலையில் கிடைத்த லாபத்தைக் கொண்டு ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தி செய்யும் ஆலை இந்த உலகத்திலேயே தொடங்கப்பட்டு உற்பத்தி அதிகமாக நடைபெற்றது மேலும் உபரி லாபத்தில் அரியலூரிலும் சிமெண்ட் ஆலை தொடங்கப்பட்டது.
டான்செம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி எனவும் தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் தொம்பகுளம், டி. கரிசல்குளம், காளவாசல் ,கல்லம நாயக்கன்பட்டி, மேலாண்மறை நாடு, அப்பையநாயக்கன்பட்டி ,வலையபட்டி, கண்மாய்பட்டி, ஆ.லட்சுமிபுரம், செந்துட்டியாபுரம், கீழாண்மறைநாடு, சத்திரப்பட்டி, கீழ ராஜகுலாராமன், உள்ளிட்ட பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வந்தனர்.
இத்தகைய புகழ்பெற்ற இந்த சிமெண்ட் ஆலையை கடந்த 30 ஆண்டுகளாக நவீனப்படுத்த அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆகையால் ஆலை மிகவும் நலிவடைந்து உற்பத்தி பெருமளவு குறைந்துவிட்டது. இந்த நிறுவனத்தில் தற்போது 50க்கும் குறைவான தொழிலாளர்களே வேலை பார்த்து வருவது வேதனைக்குரியது.
20.11.2012 அன்றைய ஆட்சியில் இருந்த நிதி அமைச்சர் முதல்வர் அவர்களின் ஒப்புத
லோடு ரூ.165 கோடி நிதி அறிவிக்கப்பட்டது. இந்த நிதி ஆலங்குளம் சிமின்ட் ஆலைக்கு பயன்படுத்தாமல் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை நவீனப்படுத்த மாற்றப் பட்டது. கடந்த பின்பு 2021 ஆட்சியில் தங்கம் தென்னரசு நிதி அமைச்சர் சட்டப் பேரவையில் ஆலையை நவீனப் படுத்த நிதி மசோதாவில் ரூ.120 கோடி அறிவித்தார். இன்று வரை எந்த செயல்பாடும் வரவில்லை.

தொழிற்சங்கங்கள் ஆலை வட்டார வியாபாரிகள் பல கட்டங்களாக போராட்டங்கள் நடத்தியும் கடந்த 15 ஆண்டுகளாக நிதி வரவில்லை.
பொதுத்துறை நிறுவனமான ஆலங்குளம் சிமிண்ட் ஆலைக்கு தேவையான சுண்ணாம்பு கற்கள் நிலங்கள் இருந்தும் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்க வில்லை. தற்போதைய அரசு உடனடியாக ஆலை நிலவரம் ஆய்வு செய்து நவீனப்படுத்திட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு, ஆலங்குளம் அரியலூர் சிமிண்ட் ஆலையில் உற்பத்தியாகும் சிமிண்ட் அரசு மற்றும் அரசுதுறை நிறுவனங்க ளுக்கு DRDA மூலம் விற்பனை செய்ய உத்தரவு வேண்டும். குறிப்பாக மார்கெட்டிங் பணிபுரியும் அதிகாரிகளுக்கு தனித் தனியாக மாதந்தோறும் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்ய வேண்டும்.
மேலும் ஆலை வளாகத்தில் உள்ள டான்செம் பள்ளி மூடும் நிலைமை உள்ளது. அவற்றின் வளர்ச்சி கருத்தில் கொண்டு அரியலூர் ஆலை பள்ளி இயங்குவது போல் தரமான நிர்வாகத்தின் கீழ் பள்ளியை இயக்க வேண்டும்.
பள்ளியின் வளாகத்தில் தேவையான விளையாட்டு மைதானம், குடிநீர் வசதி நன்றாக உள்ளது. தற்போதைய நிலைமையில் பள்ளியை ஆய்வு செய்து டான்செம் பள்ளி சீராக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் இவ்வாறு எச்.எம்.எஸ் தொழிற்சங்க துணைத் தலைவர் கே. மூக்கையா தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.




