• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மீண்டும் வில்லனாக விஜேஎஸ்!

தமிழ் திரையுலகில் குறைந்த காலத்தில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர்
விஜய் சேதுபதி. தற்போது, திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் முன்னுரிமை தருபவர் விஜய் சேதுபதி! கதாநாயகனாக மட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்து வருகிறார்!

கடந்த 2019ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் ‘பேட்ட’. இப்படத்தில் விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

அதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் திரையில் வெளியாகி வெற்றிநடைபோட்ட திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி பவானி என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து மீண்டும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். இந்த இரண்டு படங்களில் இவரது வில்லன் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது விஜய் சேதுபதி குறித்து வந்திருக்கும் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு மோகன், நடிகர் கார்த்தியை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் வில்லன் கதாபத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் சேதுபதி, சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் கார்த்தியின் நண்பனாக சிறிய கதாபாத்திரத்தில் சில காட்சிகளில் மட்டும் நடித்திருந்த நிலையில் தற்போது இரண்டாம் முறையாக, அதுவும் அவருக்கு ஈடாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார்.