• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஐபிஎல் ஏலத்தில் மயங்கிவிழுந்த ஹக் எட்மைட்ஸ்!

ஐபிஎல் ஏலத்தின் போது தொகுத்து வழங்கியவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவுகிறது.

2022ம் ஆண்டிற்காக ஐபிஎல் கிரிக்கெட் மெகா ஏலம் இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. முதற்கட்டமாக மார்க்யூ வீரர்கள் எனப்படும் அதிக மதிப்புமிக்க வீரர்களை ஐபிஎல் நிர்வாகம் முதலில் ஏலம் விடப்பட்டது. இதில் டேவிட் வார்னர் டெல்லி அணிக்கும், டூப்ளசிஸ் ஆர்சிபி அணிக்கும், ரபாடா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் என முன்னணி வீரர்கள் வெவ்வேறு அணிகளுக்கு இடம் மாறினர். இதே போல சிஎஸ்கே அணி பட்ஜெட்டை சரியாக வைத்து குறைந்த விலையில் வீரர்களை எடுத்து வந்தது.

இந்நிலையில் மெகா ஏலத்தின் போது, ஏலத்தை தொகுத்து வழங்கி வந்த “ஹக் எட்மைட்ஸ்” என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். இலங்கை வீரர் ஹசரங்காவை ஏலம் விட்டுக்கொண்டிருந்த போதே அவர் மயங்கி விழுந்ததால் அணி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். அவருக்கு என்ன ஆனது என்பதை பார்க்க மருத்துவக்குழு விரைந்தது. இதனையடுத்து ஐபிஎல் மெகா ஏலம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹக் எட்மைட்ஸ், தற்போது நலமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன!

கடந்த 36 வருடங்களாக பல்வேறு நாடுகளில் ஏலங்களை தொகுத்து வழங்கி வரும் ஹக் எட்மைட்ஸ் இதுவரை சுமார் ரூ.16 கோடிக்கு ஏலங்களை விற்றுக்கொடுத்துள்ளார். அவரின்றி ஐபிஎல் மெகா ஏலம் தொடர்ந்து நடைபெறுமா என்பது சந்தேகமே எனத்தெரிகிறது.