• Fri. Apr 26th, 2024

“சின்ன தல”-யை கைவிட்டதா சிஎஸ்கே?

சிஎஸ்கே அணிக்கு முக்கியமானவர்கள் வரிசையில் முதலில் தோனி என்றால், அடுத்ததாக ரெய்னா! அந்த வகையில் சிஎஸ்கே அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்தவர் ரெய்னா.

பெரிய தல தோனி என்றால். சின்ன தல ரெய்னா என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்தனர். அவருக்கும் சிஎஸ்கேவுக்குமான உறவு என்பது வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று. குறிப்பாக தோனிக்கும் அவருக்குமான நெருக்கம் அனைவரும் அறிந்ததே. இவ்வளவு ஆண்டுகளாக அவரை சிஎஸ்கே அணி தக்கவைத்து வந்தது.

ஆனால் கடந்த மூன்று சீசசன்களாக அவரின் ஃபார்ம் கேள்விக்குறியானது. இதனால் அவரை எப்படியாவது கைகழுவி விட வேண்டும் என்பது தான் சிஎஸ்கேவின் திட்டமாக இருந்தது. குறிப்பாக மூத்த வீரர்கள் எல்லாரும் ரிட்டையர்டு ஆகவிருப்பதால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான அணியைக் கட்டமைக்க வேண்டிய கட்டாயம் வேறு கண் முன் நிற்பதால் கனத்த இதயத்துடனே ரெய்னாவை கைகழுவ சிஎஸ்கே முடிவெடுத்திருக்கும். அதற்கு மெகா ஏலம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. இன்றைய ஏலத்தில் அவரை கழற்றிவிட்டது சிஎஸ்கே.

சிஎஸ்கே தவிர்த்து வேறு எந்த அணியும் அவரை வாங்க முன்வரவில்லை. இதனால் அவர் மீண்டும் ஐபிஎல் வருவது சந்தேகமே. சிஎஸ்கே அணிக்காக விளையாடினாலும் மிஸ்டர் ஐபிஎல் என்ற புனைப்பெயரும் அவருக்குண்டு. மிடில் ஓவரில் இறங்கி சிக்ஸர், போர்களை பறக்கவிட்டு தேவையான சமயங்களில் ரன் குவித்தவர். ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடித்தவர்களில் நான்காம் இடத்தில் இருப்பவர். 5,528 ரன்கள் குவித்துள்ளார். கொடிக்கட்டி பறந்த மிஸ்டர் ஐபிஎல் ரெய்னா இல்லாதது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *