• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டியில் திமுகவில் இணைந்த தேமுதிகவினர்!

ஆண்டிபட்டி தேமுதிக கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் எம்எல்ஏ மகாராஜன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மாற்று கட்சியினர் தொடர்ந்து திமுகவில் இணைந்து வருவதால் பேரூராட்சி தேர்தலில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது!

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இதனால் அதிமுக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து திமுக வில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். மேலும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் திமுக விற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தேமுதிக கட்சியை சேர்ந்த ஆண்டிபட்டி நகர துணை செயலாளர் பெரியசாமி தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். வேறு கட்சிகளில் இருந்து திமுக வில் இணைந்தவர்களை எம்எல்ஏ மகாராஜன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

இதில் திமுக கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜாராம், பொறுப்பு குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, கலைச்செல்வன், மாணவரணி துணை அமைப்பாளர் பிரகாஷ் மற்றும் இளங்கோ, அர்ஜூன் கார்த்திக், ஜெயபால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.