ஜம்மு காஷ்மீர் இராஜ்யத்தின் பிரதம அமைச்சராக 1937 – 1943 ஆண்டுகளில் பணியாற்றியவர் திவான் பகதூர் என். கோபாலசாமி. பின் 562 இந்திய சுதேச சமஸ்தானங்களின் சார்பாக இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 93 உறுப்பினர்களில், ந.கோபாலசாமி அய்யங்காரும் ஒருவர். கோபாலசாமி அய்யங்கார், அம்பேத்கர் தலைமையிலான அரசியலமைப்புச் சட்ட வரைவோலை குழுவில் பணியாற்றியவர். தஞ்சாவூரில் பிறந்த கோபாலசாமி அய்யங்கார், பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி மற்றும் சட்டக் கல்வியை சென்னையில் முடித்தவர். 1904ல் சிறிது காலம் சென்னை பச்சையப்பா கல்லூரியில் உதவிப்பேரராசிரியராக பணிபுரிந்தார்.இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட, கோபாலசாமி அய்யங்கார், இந்திய இரயில்வே மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின் அமைச்சராக 1948 – 1952 ஆண்டுகளில் பணியாற்றியவர். கோபால்சாமி அய்யங்கார் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 கீழ் சிறப்புத் தகுதிகள் பெற்றுக் கொடுத்தவர்.பல பதவிகளை வகித்த என். கோபாலசாமி நினைவு தினம் இன்று..!