• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 9, 2022

1.தென்றலின் வேகம்?
5 முதல் 38 கி.மீ.
2.அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது?
ரஷ்யா
3.உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?
பேரீச்சை மரம்
4.கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடு எது?
ஆஸ்திரேலியா
5.உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது?
தென் ஆப்பிரிக்கா
6.உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு?
பிரான்ஸ்
7.ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது?
1920
8.உலகின் மிகச் சிறிய சந்து எது?
புனித ஜான் சந்து. ரோமில் உள்ளது. 48 செ.மீ. அகலம்.
9.யாழ்ப்பாணத்தின் வற்றாத ஊற்று எது?
நிலாவரை
10.ஜக்கிய நாடுகள் சபையில் இலங்கை இணைந்து கொண்ட ஆண்டு எது?
1955