• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பா.ஜ., வை ஆதரிக்கும்- இந்து எழுச்சி முன்னணி

தேனி மாவட்ட
இந்து எழுச்சி முன்னணி
அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் சோலைராஜன் தலைமை வகித்தார். தேனி நகர தலைவர் செல்வப் பாண்டியன்
முன்னிலை வகித்தார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஹைதராபாத்தில் விசிஷ்டாத்வைத தத்துவ ஞானி ஸ்ரீ இராமனுஜாச்சாரியர் அவர்களுக்கு மிக பிரமாண்டமான திருவுருவச்சிலை நிறுவி “ஆன்மீகமே பாரத தேசத்தின் ஆன்மா” என நிரூபித்த சின்ன ஜீயர் அவர்களுக்கும் திருவுருவச் சிலையை பக்தி யோடு திறந்து வைத்து, தேசத்தின் பெருமையையும் கலாச்சாரத்தையும் நிலை நாட்டிய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும்
இந்து எழுச்சி முன்னணி நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., கட்சிக்கு இந்து எழுச்சி முன்னணி முழு ஆதரவை தருவதோடு, கட்சியின் வேட்பாளர்களுக்கு பிரசாரத்தின் மூலம் நேரடியாக உதவுது எனவும்,
‘நீட்’ தேர்வை வைத்து மலிவான அரசியல் செய்யும் தமிழக அரசையும், திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளையும் இந்து எழுச்சி முன்னணி வன்மையாக கண்டிக்கிறது, என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.