• Fri. May 3rd, 2024

ராஜேந்திர பாலாஜியின் பேச்சில் சிவகாசியில் பிரச்சார மேடை சூடுபிடித்தது..!

Byகாயத்ரி

Feb 7, 2022

ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று கூறிய ஸ்டாலின் வாக்குறுதி என்னாச்சு..?சிவகாசி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எடப்பாடியாரின் கேள்வி…

ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று கூறிய ஸ்டாலின் வாக்குறுதி என்னாச்சு என்றும் தேர்தல் பணிகளை முடக்கும் நோக்கில் அதிமுக நிர்வாகிகள் மீது திமுக அரசு பொய் வழக்கு போடுவதாகவும் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும் சிவகாசியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டினார்.

சிவகாசி மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு கூட்டம் சிவகாசியில் இன்று காலை கம்மவார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.பலராம் முன்னிலை வகித்தனர். சிவகாசி நகரக் கழக செயலாளர் அசன்பதூரூதீன், திருத்தங்கல் நகர கழக செயலாளர் பொன்சக்திவேல் வரவேற்புரையாற்றினர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது, விருதுநகர் மாவட்டத்திற்கு புரட்சித்தலைவி அம்மா ஆட்சியிலும் எடப்பாடியார் ஆட்சியிலும் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அதிமுக ஆட்சியில்தான் சிவகாசியில் 100 கோடி ரூபாய் அளவில் திட்ட பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.திருத்தங்கல்லில் அண்ணா திமுக ஆட்சியில்தான் 50 கோடி ரூபாய் அளவில்திட்டப்பணிகளை கொண்டு வந்துள்ளோம். எடப்பாடியார் ஆட்சியில் தான் கொண்டா நகரம் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.

சிவகாசியில்சுற்றுச் சாலை திட்டத்திற்கு அரசாணை வெளியிட்டு நிதி ஒதுக்கிடு செய்தது எடப்பாடியார் தான்.. சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம்,திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் பணிகள் தொடங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டு பணிகளை தொடங்கி வைத்தவர் எடப்பாடியார் தான். இப்படி ஏராளமான திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம். விருதுநகர் மாவட்டத்தில்மாநகராட்சி மேயர், நகர்மன்றத் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் அனைத்து கவுன்சிலர்கள் பதவிகளையும் அண்ணா திமுக கைப்பற்ற வேண்டும். நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றார்கள் என்ற வரலாற்றை நாம் உருவாக்க வேண்டும். அடுத்து எடப்பாடியாரை நான் சந்திக்கும் போது விருதுநகர் மாவட்டம் அண்ணா திமுகவின் கோட்டை என்று சொல்லும் அளவிற்கு நமது வெற்றிகள் அமைய வேண்டும். வெற்றி பெற்று விட்டோம் என்ற தகவலை மட்டும் எடப்பாடியாரிடம் கூறவண்டும். அந்த அளவிற்கு நமது தேர்தல் பணிகள்இருக்க வேண்டும்.

நமது திட்டங்களை சொன்னாலே போதும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். போன ஆண்டு தை பொங்கலுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு ரூபாய் 2500 வழங்கியது அண்ணா திமுக அரசு. விருதுநகரில் 22 ஏக்கரில் 355 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவ கல்லூரியை உருவாக்கி கொடுத்தவர் எடப்பாடியார். மாநகராட்சியின் முதல் பிரச்சாரமாக சிவகாசி பகுதிக்கு வந்திருக்கிறார். அதற்கு நன்றிக்கடனாக சிவகாசி மாநகராட்சி வெற்றிக்கனியை நாம் அவரிடத்தில் ஒப்படைக்க வேண்டும். நமது தேர்தல் பணியை சரியாக செய்ய வேண்டும். அண்ணா திமுக ஆட்சியின் சிறப்புகளை எடுத்து கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வேண்டும். பட்டாசு பிரச்சினை வந்த நேரத்தில் பட்டாசு தொழிலை பாதுகாத்த பெருமைக்கு சொந்தக்காரர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். தீப்பெட்டி, அச்சக தொழிலுக்கும் பிரச்சினை வந்தபோது அதை தீர்த்து வைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். பட்டாசு தொழிலுக்கு உயிர் கொடுத்தவர் எடப்பாடியார் அவர்கள். எடப்பாடியாரின் கடும் முயற்சியால்தான் பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட்டது.

பிரச்சனைகள் எங்கிருந்தாலும் அங்கு நான் வர தயாராக உள்ளேன். உங்களுடன் நான் பணியாற்றுவேன் உங்கள் வெற்றிக்காக நான் பாடுபடுவேன் என்று பேசினார் ராஜோந்திர பாலாஜி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *