• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

பொள்ளாச்சி அருகே தொழிலாளி மர கட்டையால் அடித்துக் கொலை

பொள்ளாச்சி அருகே திவான்சாதூர் பகுதியில மகாலிங்கம்,செல்வராஜ் இருவரும் அப்பகுதியில் தேங்காய் உரிக்கும் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று இரவு செல்வராஜ், மகாலிங்கம் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு செல்வராஜ் மகாலிங்கத்தை மரக் கட்டையால் தாக்கி உள்ளார்.

அவ்வழியே சென்ற பொதுமக்கள் மகாலிங்கத்தை மீட்டு ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் மகாலிங்கம் உயிரிழந்தார்.

இதையடுத்து மகாலிங்கத்தின் உறவினர்கள் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் வால்பாறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் சின்ன காமன் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.