• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

Byகுமார்

Feb 5, 2022

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள், மேலூா், திருமங்கலம், உசிலம்பட்டி நகராட்சிகளில் 78 வார்டுகள், 9 பேரூராட்சிகளில் 144 வார்டுகள் என மொத்தம் 322 வார்டு உறுப்பினா் பதவிகளுக்குத் தோதல் நடைபெற உள்ள நிலையில், 28 ம்தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடிக்கவும், கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 1317வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கு மதுரை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும், அமைதியாக தேர்தல் நடத்துவது, பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்தும், வாக்காளர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய வசதிகள் தொடர்பாகவும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமையில், மதுரை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் கமல் கிஷோர், காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மாநகர துணை ஆணையர்கள் தங்கதுரை ஆகியோருடன் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.