• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

இந்திய அரபு நாடுகள் கூட்டு தயாரிப்பில் பிரபுதேவா

பைலட் பிரேம்நாத் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் இந்திய-இலங்கைக் கூட்டுத் தயாரிப்பாகும்.

ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், இலங்கை நடிகை மாலினி பொன்சேகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.அதேபோன்று இந்திய அரபு நாடுகளின் கூட்டுத் தயாரிப்பாக மலையாளம் மற்றும் அரபு என இரு மொழிப்படமாக உருவாகி வருகிறது.

ஆயிஷா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அறிமுக இயக்குனரான ஆமிர் பள்ளிக்கல் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.

முதன்முறையாக மலையாளம் மற்றும் அரபு மொழியில் ஒரே நேரத்தில் உருவாகும் இந்தப்படத்தில் தற்போது நடன இயக்குனராக பிரபுதேவாவும் இணைந்துள்ளார்.

படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் அமைக்கிறார் பிரபுதேவா. இந்த நடன ஒத்திகையின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள மஞ்சு வாரியார், கனவு நனவான தருணம் என தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.