• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

இந்த விஷயத்திற்காக நாளை கட்டுப்பாடு…அரசு விளக்கம்

Byகாயத்ரி

Feb 2, 2022

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 53-வது நினைவு தினம் நாளை (3-ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கட்சியின் முன்னணியினர் நாளை காலை 8 மணிக்கு காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.இந்நிலையில், அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு கோயில்களில் நாளை சிறப்பு வழிபாடு, பொது விருந்து நடத்த அனுமதி இல்லை என்று தமிழக அரசு திடீரென கட்டுப்பாடு விதித்துள்ளது.தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பொது விருந்து நடத்த அனுமதி இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது