• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

9 வயதில் ராஜ வாழ்க்கை வாழும் ‘இளைய கோடீஸ்வரர்’!

நைஜீரியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் நம்மில் பலர் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவிற்கு உண்மையிலேயே கோடீஸ்வர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

முகமது அவல் முஸ்தபா (Muhammed Awal Mustapha) எனும் அந்த சிறுவனுக்கு பல மாளிகைகளும், உலகம் முழுவதும் பயணம் செய்ய தனி ஜெட் விமானம், பல விலை உயர்ந்த சூப்பர் கார்கள் என ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். மேலும், ‘இன்புளுயன்சர்’ எனப்படும் அவர், உலகின் ‘இளைய கோடீஸ்வரர்’ (youngest billionaire) என்று செல்லப்பெயர் பெற்றுள்ளார்.

வெறும் 9 பதிவுகளுடன் Instagram-ல் 25,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். நைஜீரியாவில் Mompha என்று பிரபலமாக அறியப்படும் இணைய பிரபலமான இஸ்மாலியா முஸ்தபாவின் (Ismailia Mustapha) மகன் தான் இந்த முகமது அவல் முஸ்தபா.

9 வயதாகும் சிறுவன் Mompha Junior என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு 6 வயதில் முதல் மாளிகை வழங்கப்பட்டது. மொம்பா ஜூனியர் வழக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து, அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் காட்டுவார்.

முன்னதாக, அவர் தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தின் படத்தைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் , “எந்தவொரு நைஜீரிய நபரையும் ஒருபோதும் குறைத்து பார்க்காதீர்கள், உண்மையான ஹஸ்ட்லர்கள் உடைந்து போக மாட்டார்கள், ஒருபோதும் உடைந்துவிடாதீர்கள்… ஹஸ்ட்லர்கள் சம்பிரதாயங்களிலிருந்து வேறுபட்டவர்கள்!!! கடவுள் ஆசீர்வதிப்பாராக (அமீன்) ).” என்று பதிவிட்டுள்ளார்.