ஆண்டிபட்டி அருகே மதுப்பான கடையில் கள்ளநோட்டை மாற்ற முயற்சித்தபோது 3 லட்சத்து 90ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் வருசநாடு நகர்பகுதியிலுள்ள மதுகடையில் நந்தனார்புரம் பகுதியை சேர்ந்த தவம் என்பவர் 500 ரூபாய் கள்ளநோட்டை கொடுத்து மதுவாங்க முயற்சித்த போது சந்தேகம் ஏற்படவே மதுபானகடை ஊழியர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் தவம் என்பவரை பிடித்து வருசநாடு சார்பு ஆய்வாளர் அருண்பாண்டி தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ளநோட்டுகள் தயாரித்த செல்வம், ராஜ்குமார், தவம் ஆகிய 3 பேர் கொண்ட கும்பலை கைது செய்து மொட்டபாறை பகுதியில் பதுக்கபட்ட 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 100 ரூபாய் கள்ளநோட்டு கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய மேலும் ஒருவரை வலைவீசி தேடிவருகின்றனர். இச்சம்பவவம் ஆண்டிபட்டி வருசநாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.