• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நகர்ப்புறத் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு

Byகுமார்

Jan 28, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ரவீந்திரநாத் குமார் எம்பி மதுரை விமான நிலையத்தில் பேட்டி.

நடைபெறவுள்ள நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் கூட்டணி குறித்து தலைமை முடிவு எடுக்கும் எனவும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகைதந்த தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.மதுரை – தேனி ரயில் இயக்கம் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு அவர் கூறுகையில் மதுரையில் இருந்து தேனி செல்லக்கூடிய ரயில்வே பாதை பணிகள் முடிவடைந்து விட்டது.வருகிற 31-ஆம் தேதி அதிவிரைவு ரயில் இயக்க சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும் விரைவில் தேனி – போடி வரையிலான ரயிலை இயக்குவதற்கான பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து ரயில்வே அமைச்சரிடம் கடிதம் எழுதியுள்ளேன். விரைவில் பணி தொடங்க உள்ளதாக கூறியுள்ளனர்.தொடர்ந்து தமிழக மீனவர்கள் படகை இலங்கை அரசு ஏலம் விடும் முடிவு குறித்த கேள்விக்கு இதுகுறித்து ஏற்கனவே அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழக மீனவர்கள் படகை இலங்கை அரசு ஏலம் விடுவது கண்டனத்துக்குரியது என தெரிவித்தார். தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் இதற்கு முன் எம்எல்ஏ தேர்தலில் ஏற்பட்ட தோல்விகள் குறித்து அதிமுக நிர்வாகிகள் புரிந்து வைத்துள்ளனர்.

எனவே அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும் என ரவிந்திரநாத் கூறினார்.