• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வேலூரில் போலி செய்தியாளர்கள் மடக்கிபிடிப்பு!

Byமதன்

Jan 16, 2022

தமிழக மக்களை கொடிய நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற சீரிய சிந்தனையில் தமிழக முதல்வர் ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கினை உத்தரவிட்டார்..

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றனர்..

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமையில் பல இளைஞர்கள் போலியாக பிரஸ் என்று வாகனத்தில் ஒட்டிக்கொண்டு ஊர் சுற்றித் திரிவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது..

இதனை தொடர்ந்து, வேலூர் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரிலும் காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில், போலி நிருபர்களை மடக்கி பிடித்து, அவர் வாகனங்களில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் அவர்கள் மூலமே எடுக்க செய்தனர்.. மேலும், ஊரடங்கில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.