• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இறைவனடி சேர்ந்த தினம் இன்று..!

Byகாயத்ரி

Jan 8, 2022

காஞ்சி முனிவர் காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதி
சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். பரவலாக இவர் பரமாச்சாரியார், மகாசுவாமி மற்றும் மகா பெரியவாள் என அழைக்கப்பட்டார். தெய்வத்தின் குரல் எனும் பெயரில் இந்து மதத் தத்துவங்களைப் புத்தகமாக எழுதியுள்ளார்.

1894 மே 20 அன்று தென் ஆற்காடு மாவட்டத்தில் விழுப்புரத்தில் இவர் பிறந்தார். இவரது தந்தை சுப்ரமண்ய சாஸ்திரி தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்தார், இவர் கன்னட மொழி பேசும் ஸ்மார்த்த பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர், இந்திய ஆன்மீக நிலப்பரப்பெங்கும் ஆன்மீகப் பயணம் செய்து தனது அறிவைப் பரப்பத் தொடங்கினார்.

தினமும் சந்தியாவந்தனம், ஶ்ரீசந்திரமெளலீஸ்வரி பூஜை, ஶ்ரீபஞ்சதான்ய பூஜை, காமாட்சி அம்மன் பூஜை ஆகியவற்றைச் செய்வது வேதங்களை ஓதுவது போன்ற இவரது நடவடிக்கைகள் இவரை உலகெங்கும் பிரபலமாக்கியது. சிறந்த ஞானியாக ஆதிசங்கரரைப் போலவே இவரும் நாட்டின் பல்வேறு இடங்களில் சொற்பொழிவாற்றினார். பல முக்கியப் பிரமுகர்கள் சந்திரசேகர சரசுவதி சுவாமிகளைச் சந்தித்துள்ளனர்.

தலாய் லாமா, சத்ய சாய் பாபா, மஹாத்மா காந்தி, ராஜாஜி, எம்.எஸ். சுப்புலெக்ஷ்மி, இந்திரா காந்தி, சுப்பிரமணியன் ஸ்வாமி, சங்கர் தயாள் சர்மா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி,கல்கி கிருஷ்ணமூர்த்தி, சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஶ்ரீ ஶ்ரீ ரவிஷங்கர், பிரணாய் ராய், அமிதாப் பச்சன், பிர்லா குடும்பத்தினர், ஜே.ஆர்.டி டாடா மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் போன்றோர் இவர்களுள் சிலர். சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இறைவனடி சேர்ந்த தினம் இன்று..!