• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

காவல்துறையினருக்கான வழிகாட்டு நெறிமுறைகள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் ஊரடங்கின் போது காவல்துறையினர் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை டிஜிபி வெளியிட்டுள்ளார்.

அந்த நெறிமுறைகள்:

  • ஊரடங்கு வாகன சோதனையின் போது காவல்துறையினர் பொதுமக்களிடம் கனிவாகவும் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்
  • பத்திரிகை, மருத்துவம், மின்சாரம், சரக்கு, பால் மற்றும் எரிபொருள் ஆகிய அத்தியாவசிய பணியாளர்களை அனுமதிக்க வேண்டும்
  • அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை எந்த காரணத்தை கொண்டும் தடை செய்யக்கூடாது
  • அடையாள அட்டையுடன் பயணம் செய்யும் பணியாளர்களை உடனடியாக அனுமதிக்க வேண்டும்
  • நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு செல்வோர் அழைப்பு கடிதத்தை காண்பித்தால் உடனடியாக அனுமதிக்க வேண்டும்
  • அவசர காரணங்கள் வெளியூர் செல்வோர் பணி முடிந்து வீடு திரும்பும் ஆகியோரையும் அனுமதிக்கவேண்டும்

இவ்வாறு போலீசாருக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.