
பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் மூலம் போலியான டிரெண்டுகளை உருவாக்கவும், இணைய தாக்குதல்களை முன்னெடுக்கவும் டெக் ஃபாக் (Tek Fog) என்ற டாப் சீக்ரெட் செயலி பயன்படுத்தப்பட்டு வந்ததாக தி வயர் ஊடகம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்த செயலியை பயன்படுத்தி இணையத்தில் அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் தொடர்பான பொய்யான டிரெண்ட்களை பாஜக உருவாக்கி வந்ததாக அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் @Aarthisharma08 என்ற ட்விட்டர் பக்கத்தில் இருந்து பாஜகவிற்கு எதிராக ஒரு ட்விட் செய்யப்பட்டு இருந்தது. அந்த ட்விட்டில், பாஜகவின் ஐடி விங்கிற்காக நான் பணியாற்றினேன். அவர்களின் சீக்ரெட் செயலியான டெக் ஃபாக் (Tek Fog) மூலம் நான் அவர்களுக்காக டிரெண்டுகளை செய்து வந்தேன். இதற்காக எங்களுக்கு ஒரு போஸ்டுக்கு 2 ரூபாய் கொடுத்தனர்.
2018க்கு பின் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் எங்களுக்கு அரசு வேலை கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் அவர்களுக்கான நான் 2014ல் இருந்து வேலை பார்த்தும் கூட எங்களுக்கு அரசு வேலை தரப்படவில்லை. டெக் ஃபாக் (Tek Fog) உள்ளிட்ட பல சீக்ரெட் ஆப்களை வைத்து பாஜகவினர் இந்த டிரெண்ட்களை செய்து வருகிறார்கள் என்று அந்த பெண்மணி குறிப்பிட்டு இருந்தார். அப்போது இந்த ட்விட் இணையம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தற்போது இந்த டெக் ஃபாக் (Tek Fog) குறித்துதான் தி வயர் ஊடகம் ஆய்வு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. டெக் ஃபாக் (Tek Fog) செயலியில் பாஜகவிற்காக பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள், இதை பற்றி வெளிப்படையாக பேசிய சில நிர்வாகிகள், பாஜகவின் இளைஞர் அணியில் இருந்து இந்த டெக் ஃபாக் (Tek Fog) பற்றி பேச ஒப்புக்கொண்ட சிலரிடம் பேட்டி எடுத்து, அவர்கள் கொடுத்த கோட் மூலம் நேரடியாக இந்த செயலியை சோதனை செய்தி டெக் ஃபாக் (Tek Fog) எப்படி இயங்குகிறது என்ற தி வயர் ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.
புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் டெக் ஃபாக் (Tek Fog) செயலி என்பது இணையத்தில் பொய்யான டிரெண்டுகளை உருவாக்கும் செயலி ஆகும். அதாவது பாஜகவிற்கு ஆதரவாக ஒரு டிரெண்ட்டை உருவாக்க வேண்டும் என்றால் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் ஒரே நேரத்தில் பல்லாயிரம் போஸ்ட்களை இதில் போட முடியும். தினமும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு குறிப்பிட்ட டேக்குகளை இதில் டிரெண்ட் செய்துள்ளனர். இதில் இருக்கும் ஒவ்வொரு மெம்பரும் டெக் ஃபாக் (Tek Fog) உதவியுடன் பல ஆயிரம் போஸ்ட்களை போட்டு பொய்யான கருத்தை, பிரச்சாரத்தை இணையத்தில் முன்னெடுத்துள்ளதாக தி வயர் குறிப்பிட்டுள்ளது.
அதாவது ஒரு டேக்கை உருவாக்குவது, அதை சில நிமிடங்களில் தேசிய அளவில் டிரெண்ட் செய்வது, எதிர்க்கட்சிகள் உருவாக்கும் டேக்கை காலி செய்வது, எதிர்கட்சித் தலைவர்கள் போடும் போஸ்டுகளில் போய் கடுமையான எதிர்ப்புகளை தெரிவிப்பது என பல விஷயங்களை டெக் ஃபாக் (Tek Fog) மூலம் இவர்கள் போஸ்ட் செய்துள்ளனர். ஒரே நேரத்தில் பல ஆயிரம் கணக்குகளை டெக் ஃபாக் (Tek Fog) மூலம் உருவாக்கி அதில் போஸ்டுகளை செய்துள்ளனர். ஒரே நபர் சில நிமிடங்களில் டெக் ஃபாக் (Tek Fog) மூலம் நூற்றுக்கணக்கான கணக்குகளில் இருந்து ஆயிரக்கணக்கான ட்விட்களை செய்ய முடியும்.
அதேபோல் ஆட்டோ மெட்டிக் ட்விட்களையும் இவர்கள் உருவாக்க முடியும். இதன் மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள் போஸ்ட் போட்டால் அதில் எளிதாக கெட்ட வார்த்தைகள் மூலம் ஆட்டோமெட்டிக் போஸ்ட்களை இதில் போட முடியும். இதற்காக தினமும் ஒவ்வொரு மெம்பருக்கும் இந்த ஆப் மூலம் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஒரு நாளுக்கு நீங்கள் எவ்வளவு போஸ்ட் செய்துள்ளீர்கள். அது எவ்வளவு ரீச் ஆகியுள்ளது. இதில் உங்கள் வருமானம் எவ்வளவு என்று அனைத்தையும் இந்த டெக் ஃபாக் (Tek Fog) செயலியே தெரிவித்துவிடும்.
மேலும் ஒவ்வொரு நாளும் எதை எப்படி டிரெண்ட் செய்ய வேண்டும். இன்றைய டாப்பிக் என்ன என்ற கூகுள் ஷீல்ட் விவரமும் இந்த டெக் ஃபாக் (Tek Fog) மூலம் பார்க்க முடியும் என்று தி வயர் ஊடகம் வெளியிட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி பத்திரிக்கையாளர்கள், முக்கியமாக பெண் பத்திரிகையாளர்கள் பாஜகவிற்கு எதிராக பேசினால் அவர்களை திட்டுவதற்காகவும் இதில் ஸ்பெஷல் கீ வேர்டுகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களை கெட்ட வார்த்தையில் திட்டவும் டெக் ஃபாக் (Tek Fog) செயலியில் நிறைய கீ வேர்ட்ஸ் இருந்துள்ளது.
இதை வைத்து இணையத்தில் பாஜக நினைத்த டிரெண்டுகளை உருவாக்கி உள்ளதாக தி வயர் ஊடகம் வெளியிட்டுள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமும் பொய்யான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. . அதாவது நீங்கள் பயன்படுத்தாத வாட்ஸ் ஆப் எண்ணில் இருந்து உங்களுக்கே தெரியாமல் உங்களுது உறவினர்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும். நீண்ட காலமாக உங்களின் வாட்ஸ் ஆப் எண் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அதை கண்டுபிடித்து அந்த கணக்கை இந்த செயலி காப்பி செய்தி இன்னொரு பொய்யான கணக்கை உருவாக்கி உங்களின் உறவினர்களுக்கு பாஜக ஆதரவு பார்வேட் மெசேஜ்களை பரப்ப முடியும் என்று இந்த ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
டெக் ஃபாக் (Tek Fog) செயலி மூலம் இந்த டிரெண்ட் அனைத்தையும் பொய்யாக மேற்கொள்ள முடியும். அதோடு இதற்கு எந்த ஆதாரமும் இருக்காது. டெக் ஃபாக் (Tek Fog) செயலி மூலம்தான் இந்த டிரெண்ட் செய்யப்படுகிறது என்பதற்கான எந்த ஆதாரமும் இதில் இருக்காது. யார் இப்படி டிரெண்ட் செய்தனர் என்ற டிஜிட்டல் ஆதாரம் எதையும் ட்விட்டர் மூலம் கண்டுபிடிக்க முடியாத வகையில் டெக் ஃபாக் (Tek Fog) செயலி நவீன தொழில் நுட்பம் மூலம் செய்லடுகிறது என்று இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஷேர் சாட் போன்ற மற்ற செயலிகளிலும் இதே முறைப்படி பொய்யான டிரெண்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூக பிரச்சனைகளில் பொய்யான கருத்துக்கள் டெக் ஃபாக் (Tek Fog) செயலி மூலம் பரப்பப்பட்டு டிரெண்ட் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த கட்டுரையில் இடம்பெற்று இருக்கும் தகவல்கள் அனைத்தும் தி வயர் ஊடகத்தில் வெளியான ஆங்கில கட்டுரையின் தமிழ் சுருக்கம் ஆகும். பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு, முறையான விசாரணைகள், சோதனைகளுக்கு பின் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளதாக The Wire ஊடகம் தங்கள் கட்டுரையில் தெரிவித்துள்ளது.
