• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இரவு ஊரடங்கு -547 வாகனங்கள் பறிமுதல்!

சென்னையில் இரவு நேர ஊரடங்கின்போது விதிகளை மீறியதாக 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்றில் இருந்து இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சென்னையில் நள்ளிரவில் 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது.

இதில் 501 இருசக்கர வாகனங்கள், 32 ஆட்டோக்கள், 14 இலகுரக வாகனங்கள் ஊரடங்கை மீறியதாக கூறி, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதவிர முகக்கவசம் அணியாதது தொடர்பாக 462 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இரவுநேர ஊரடங்கு காரணமாக சென்னை மாநகரில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று காவல் ஆணையர் தெரிவித்திருந்தார்.