தேனி மாவட்டம் கம்பத்தில் ரூ. 67 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பதுக்கிய, இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 7 மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கம்பம் மின்வாரிய அலுவலக ரோடு, பைபாஸ் ஜங்ஷன் அருகே அரசு தடைசெய்த புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சார்பு ஆய்வாளர் ஜெயபாண்டியன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் நேற்று (ஜன.6) ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சாக்கு மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த இருவரை போலீசார் பிடித்து மூடைகளை சோதனை செய்தனர். அப்போது அதில் அரசு தடை செய்த புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் கம்பம் முகைதீன் ஆண்டவர் பள்ளி தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான் மகன் முகமது ஆசிக் 39, மற்றொருவர் விவேகானந்தர் தெருவை சேர்ந்த பதிவுதின் மகன் அப்துல் காதர் 36, என தெரியவந்தது. மேலும் விற்பனைக்காக ரூ. 67 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து, 7 புகையிலை மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.