• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் அருகே, குடகனாறு, ராஜ வாய்க்கால் விவகாரம்..,

Byp Kumar

Nov 28, 2026

ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் அருகே, குடகனாறு மற்றும் ராஜ வாய்க்காலில் தண்ணீர் செல்லும் விவகாரத்தில், சிமெண்ட் தடுப்புச் சுவரை சனிக்கிழமை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் இருந்து தண்ணீர் வருகிறது. இதில், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் நிரம்பி மறுகால் செல்லும் தண்ணீர் குடகனாறில் வேடசந்தூர் வரை செல்கிறது.

அதேபோல், காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு வரும் கண்ணீர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கன்னிமார் கோவில் என்ற இடத்திலிருந்து ராஜ வாய்க்கால் வழியாக அழகர்நாயக்கன்பட்டி கண்மாய், போடிகாமன்வாடி கண்மாய், செங்கட்டாம்பட்டி கண்மாய் வழியாக நிலக்கோட்டை வரை செல்கிறது.

இந்நிலையில், கன்னிமார் கோவில் என்ற இடத்திலிருந்து ராஜ வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லும் இடத்தில் கடந்த 2016-ஆம் சிமெண்ட் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. இதற்கு குடகனாறு பாசன விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், ராஜ வாய்க்காலில் தண்ணீர் செல்லும் இடத்தில் சிமெண்ட் தடுப்பு கட்டப்பட்ட விவகாரத்தில், ராஜ வாய்க்கால் பாசன விவசாயிகளும், குடகனாறு பாசன விவசாயிகளும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இந்நிலையில் குடகனாறு மற்றும் ராஜ வாய்க்கால் விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் சனிக்கிழமை நேரில் வந்து ராஜ வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லும் இடத்தில் கட்டப்பட்டுள்ள சிமெண்ட் தடுப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நீதிபதிகள் ஆவியின் போது, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், வருவாய்த் துறையினர், பொதுப்பணித் துறையினர், வனத்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆய்வின் போது நீதிபதிகள், ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் மற்றும் குடகனாறு பாசன விவசாயிகளிடம் கருத்துகள் கேட்டறிந்தார். மேலும், தண்ணீர் செல்லும் வரைபடங்களையும் பார்வையிட்டார். நீதிபதிகள் ஆய்வினால் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் மற்றும் ராஜ வாய்க்கால் தண்ணீர் செல்லும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.