கோவை, நவ. 26 நகை தயாரிப்பில் 47 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட சென்னையைச் சேர்ந்த ஜே.சி.எஸ். ஜுவல் கிரியேஷன்ஸ் கோவை ஆர்.எஸ். புரம் ராமச்சந்திரா சாலையில் தனது புதிய விற்பனையகத்தைத் தொடங்கியுள்ளது.

1979-ம் ஆண்டு முதல் நகை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், 2013-ல் சில்லறை விற்பனையில் கால்பதித்தது. புதிய விற்பனையகத்தில் பாரம்பரிய கோயில் நகைகள், ஜடாவ் நகைகள் முதல் நவீன தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளின் பிரத்யேகத் தொகுப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள ஒவ்வொரு நகையும் நிறுவனத்தின் சொந்தத் தயாரிப்புப் பிரிவில் கைவினைக் கலைஞர்களால் நேர்த்தியாக வடிவமைக்கப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தேசிய நகை விருதுகள் 2026-ல் சிறந்த வைர வளையல் பிரிவில் இந்நிறுவனம் விருது வென்றுள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் அரவிந்த் கட்ரேலா கூறுகையில், நேர்த்தியான நகை வடிவமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கோவை மக்களுக்கு, எங்களது சொந்தத் தயாரிப்பிலான தனித்துவமான நகை அனுபவத்தை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.


