மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் பழமையான ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பின்பு கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.,

இதில் கணபதி ஹோமம் தொடங்கி முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்று யாக சாலையிலிருந்து மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.,

தொடர்ந்து கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.,

தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ட்ரோன் மூலம் புனித நீர் தெளித்தனர்.,
தொடர்ந்து கருவறையில் உள்ள முத்தாலம்மன் பீடத்திற்கு பால், தயிர்,சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது., இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்., தொடர்ந்து பொதும்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.,


