• Sun. Nov 22nd, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

பணி நிரந்தரம், ரூ.22,000 ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பு..,

ByKalamegam Viswanathan

Nov 22, 2026

தமிழ்நாடு அனைத்து கிராம கணினி இயக்குபவர்கள் நலச் சங்கத்தின் மதுரை மாவட்ட அனைத்து கிராம ஊராட்சி கணினி இயக்குபவர்கள் நலச் சங்கம் சார்பாக மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் பிரபு தாஸ் மாவட்டச் செயலாளர் நாகூர் கனி ஆகியோர் தலைமையிலும் மாவட்ட பொருளாளர் அஹ்மத் சிராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் சக்கரவர்த்தி மாநிலத் துணைத் தலைவர் யோகேஸ்வரன் மாநில பொதுச் செயலாளர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் செல்லம்பட்டி, உசிலம்பட்டி, அலங்காநல்லூர், மேலூர், கொட்டாம்பட்டி, மதுரை கிழக்கு, சேடபட்டி, கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம், மதுரை மேற்கு, திருமங்கலம், வாடிப்பட்டி ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாநில தலைவர் கூறியதாவது:

“கிராம ஊராட்சிகளில் எந்தவொரு பணியாக இருந்தாலும் 50% மேல் கணினி தொடர்பான வேலைகளை நாங்கள் தான் முன்னின்று செய்கிறோம். இருப்பினும் எங்களுக்கு உரிய பணி பாதுகாப்போ அல்லது தகுந்த ஊதியமோ வழங்கப்படுவதில்லை. எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக கவனம் செலுத்தி எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். நீண்ட நாட்களாக பணியாற்றி வரும் கிராம ஊராட்சி கணினி இயக்குபவர்களின் பணியை உடனடியாக அரசு நிரந்தரம் செய்ய வேண்டும்.

அதிகபட்ச ஊதியமாக மாதம் ரூ. 22,000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிராம கணினி இயக்குபவர்களுக்கு கடுமையான அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் தொடர்கின்றன. மேலும் பொய்யான பிசிஆர் (PCR) வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, அனைத்து கணினி இயக்குபவர்களுக்கும் உரிய பணி பாதுகாப்பை அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும்.”

எனவே, கிராமப்புற மக்களின் சேவையில் முக்கிய பங்காற்றும் கணினி இயக்குபவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு பரிசீலித்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்தப்பட்டது.