மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியில் குடியிருப்பவர் கண்ணாயிரம் இவர் ஓய்வு பெற்ற நில அளவையர் இவரது மனைவி பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இவரது வீட்டின் மாடி பகுதியில் மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு 2 லட்சம் நோக்கம் டிவி மிக்சி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் கட்டிடங்களும் சேதமடைந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருந்தார்.

இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் தீ விபத்து நடந்த இடத்தில் இருந்த ரொக்க பணத்தை எடுப்பதற்காக மாடிப்படிக்கு சென்ற வீட்டின் உரிமையாளர் கண்ணாயத்திற்கு தீயின் அனல் காற்று பட்டதில் முகத்தில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்தார் இந்த நிலையில் முகத்தின் தீக்காயங்கள் ஆராத நிலையில் தனது சட்டை பையில் வைத்திருந்த ரூபாய் 25,000 அனல் காற்றில் கருகி விட்டதாக கூறி சோழவந்தானில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று 25 ஆயிரம் ரூபாய் பணத்தை மாற்றி தரச் சொல்லி கூறியுள்ளார்.
அதற்கு வங்கி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்து புகார் ரசீது கொண்டு வரும்படி கூறியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். தீ விபத்தில் ரொக்க பணம் மற்றும் பொருட்கள் வீடு சேதமடைந்து கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கும் அவருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மேலும் தீ விபத்திற்கு காரணமான பழைய மின் வயர்களை மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இவரது மகன் ராம்குமார் அந்த பகுதியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகியாக உள்ள நிலையில் இதுவரை கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினரோ மற்ற முக்கிய நிர்வாகிகளோ வந்து பார்க்கவில்லை ஒரு ஆறுதல் கூட கூற வரவில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார் ஆகையால் கட்சி சார்பில் நிதி உதவி தராவிட்டாலும் ஆறுதல் கூறவாவது சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா வரவேண்டும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனையுடன் கூறியுள்ளனர்


