திண்டுக்கல் பேருந்து நிலையம் ஆனது தென் மாவட்டத்தின் முக்கிய பேருந்து நிலையமாக விளங்குகிறது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான பேருந்து பயணிகள் திண்டுக்கல் பேருந்து நிலையத்தை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து மதுரைக்கு செல்லக்கூடிய அரசு பேருந்து காலை 10:20 மணிக்கு புறப்பட வேண்டிய நேரத்தில் தனியார் பேருந்து புறப்பட்டு பேருந்து நிலைய நுழைவாயில் வெளியே வந்தது. போது அரசு பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்திய ஓட்டுனர் மற்றும் நடத்துனரால் தனியார் பேருந்து நிறுத்தப்பட்டது. இதனால் அரசு பேருந்து ஓட்டுனர் நடத்துனர் மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர் நடத்துனர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் நிலவியது.

பிற மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பேருந்து நிலையத்தை விட்டு வெளியே செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து பாதிப்பானது. ஏற்பட்ட நிலையில் உடனடியாக காவல்துறையினருக்கும், போக்குவரத்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து உயர் அதிகாரிகள் தனியார் பேருந்து மற்றும் ஓட்டுனருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தனியார் பேருந்து மீது நடவடிக்கை எடுக்கும் விதத்தில் தனியார் பேருந்தில் பயணிக்க காத்திருந்த பயணிகளை கீழே இறக்கி விட்டு தனியார் பேருந்தை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
நேரம் மாற்றி எடுக்கப்பட்ட சூழ்நிலையில் தனியார் பேருந்தில் பயணிக்க காத்திருந்த பயணிகள் கீழே இறக்கி விடப்பட்ட சம்பவமும் பிற மாவட்டங்களுக்கு செல்வதற்காக காத்திருந்த பயணிகள் காலதாமதமாக செல்லக்கூடிய நிலையும் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர் மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர் நடத்துனர்களுக்கு இடையே இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக பேருந்து பயணிகள் மற்றும் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பல்வேறு அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது போக்குவரத்து துறை பேருந்து பயணிகளின் நலன் கருதி மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
