• Wed. Nov 18th, 2026

செக்கானூரணி நிலையத்தில் 10 மணி நேரத்திற்கு மேலாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு..,

ByP.Thangapandi

Nov 18, 2026

தேனி மாவட்டம் தேவாரம் அருகே அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் கடந்த 3 ந் தேதி ஏலக்காம் ஏற்றி வந்த லாரியில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக அளித்த புகார் அடிப்படையில் விசாரணைக்காக

கடந்த 13ஆம் தேதி மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு இரவு முழுவதும் ஆய்வாளர் முத்து விசாரணை செய்த நிலையில் அதிகாலை பாலகிருஷ்ணன் காவல் நிலையத்தில் இருந்த கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.,

இச்சம்பவம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி யிடம் ஒப்படைத்து விசாரணை மேற்கொள்ள தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டிருந்த நிலையில்

கடந்த 15 ந்தேதி சிபிசிஐடி எஸ்பி ஸ்டாலின் தலைமையில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார் நள்ளிரவு வரை விசாரணை மேற்கொண்ட நிலையில் 16 ந்தேதி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை 10 மணி நேரத்திற்கு மேலாக செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.,

இந்தசம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் வழக்கில் தொடர்புடையதாக இதுவரை யாருடைய பெயரையும் சேர்க்கவில்லை இந்த நிலையில் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆய்வாளர் முத்து, தலைமை காவலர் பழனிவேல் ராஜன் மற்றும் பெண்காவலர் கலைச்செல்வி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் மூன்று பேரிடமும் வாக்குமூலத்தை பெற்று அவர்கள் அளித்த வாக்குமூலத்தை மூன்று பேரிடமும் எழுத்துப்பூர்வமாக அவர்கள் கைப்படவே எழுதியும் பெற்றுக் கொண்டனர்.,மேலும் வாலாந்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜா,காவலர் பாண்டியராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு காவலர் கண்ணன் உள்ளிட்டோரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.,இரண்டு தினங்களாக விசாரணை தொடர்பான அறிக்கைகளை தயார் செய்து செக்கானூரணி காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிபிசிஐடி போலீசார்.,

இன்று மூன்றாவது நாளாக செக்கானூரணி காவல் நிலையத்தில் ஆய்வாளர் சாந்தலட்சுமி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய தொடங்கினர் கடந்த 2 ந்தேதி முதல் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்ட 14 ந்தேதி வரை சிசிடிவி காட்சி பதிவுகள் அனைத்தையும் 10 மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து லந்த நிலையில்

சிபிசிஐடி போலீசார் விசாரணை நாளையும் நடைபெறும் என தெரிகிறது.,

இந்த நிலையில் இறந்த பாலகிருஷ்ணன் உடல் உடற்கூறாய்வு செய்து மூன்று நாட்களுக்கு மேலாகியும் தற்போது வரை அவரது உடலை பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.,

சம்பவம் தொடர்பாக அனைத்துசிசிடிவி காட்சிகளையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனைவி சுதா மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன் செக்கானூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி நகர் மற்றும் தாலுகா காவல் நிலையங்களின் சிசிடிவி காட்சிகள் அனைத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.,

இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் தற்கொலை குறித்து காவல் நிலையத்தில் உள்ள முழு கணினி சிசிடிவி காட்சிகளுடைய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர் தொடர்ந்து 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்ற நிலையில்

தற்போது உசிலம்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 2 நீதிபதி சத்திய நாராயணன் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு வருகை தந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணையை மேற்கொண்ட பின்பு காரில் சென்றார்.,