மதுரை ரயில்வே மேற்கு நுழைவாயில் பகுதியில் உள்ள ரயில்வே மண்டபத்தின் சுற்றுச்சுவர் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது
அப்போது சுற்றுச்சுவரின் அருகேயுள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த குமரேசன் மற்றும் இப்ராகிம் ஆகிய இருவர் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த நிலையில் இருவருக்கும் கால் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது

இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்
இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த கரிமேடு போலீசார் காவல்துறையினர் விசாரணை நடத்துவதற்காக ரயில்வே மண்டப பணியாளரை அழைத்துச் சென்றுள்ளனர்.

விபத்து நடைபெற்ற பகுதியில் மதுரை மாநகர தெற்கு காவல்துறை துணை ஆணையர் இனிகோ திவ்யன் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்
ரயில்வே மண்டபம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக எஸ் எஸ் காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

விபத்து தொடர்பாக ரயில்வே மண்டப பணியாளரை காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது ரயில்வே பணியாளர் ஒருவர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.