தமிழ்நாட்டில் இருந்து கருங்கல், ஜல்லிகற்கள் போன்ற கனிமங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு விதித்த தடையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

தடை விதிக்க வழிவகை செய்த தமிழ்நாடு சட்ட விரோத கனிமச்சுரங்கம், கனிம போக்குவரத்து, சேமிப்பு, தடுப்பு திருத்த விதிகள் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
