தேனி மாவட்டம் தேவாரம் அருகே அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் இவர் மதுரை சேர்ந்த நாகராஜ் என்ற ஏலக்காய் வியாபாரியிடம் ஓட்டுனராக பணியாற்றி வரும் நிலையில், கடந்த 03 ந்தேதி போடியில் இருந்து மதுரைக்கு லாரியில் ஏலக்காய் ஏற்றி வந்தாக கூறப்படுகிறது.,

இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் என்ற இடத்தில் லாரி எரிந்து விட்டதாக கூறி புகாரளிப்பதற்காக நேற்றிரவு மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.,
அவர் அளித்த புகாரில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரை காவல் நிலையத்திலேயே போலீசார் இரவு தங்க வைத்துள்ளனர்.,

காவல் நிலைய ஆய்வாளர் அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தவர், இன்று காலை காவல்நிலைய கழிவறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.,
முதற்கட்ட விசாரணையில், தான் அளித்த புகார் மூலம் தானே போலீசாரிடம் சிக்கிக் கொண்டதால் பயத்தில் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.,

இன்று அதிகாலை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வெளியே சென்றபோது, அவர் காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.,
இதையடுத்து, மதுரை மாவட்ட எஸ்.பி தேவநாதன் நேரில் விசாரணை நடத்தி வருவதால், செக்கானூரணி காவல் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.,
”மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்குள் புகார் அளிக்க வந்த லாரி ஓட்டுநர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.,

காவல் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மரணத்தின் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக கூறி செக்கானூரணி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.,
தொடர்ந்து செக்கானூரணி காவல் ஆய்வாளர் முத்து கிராமபொது மக்களிடம் விசாரணை என்ற பெயரில் காரணம் இன்றி அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.,