சென்னை, பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஊராட்சி கழக தி.மு.க சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

ஒன்றிய பொருளாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக பல்லாவரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக துணைச் செயலாளருமான இ.கருணாநிதி கலந்து கொண்டு, 1000 பேருக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ரவி, பம்மல் வடக்கு பகுதி செயலாளர் ஜெய்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் கே.செல்வராஜ், வி.ஜோசப், பொன்.பிரபாகர், யுவராஜ் உள்ளிட்ட ஒன்றிய மற்றும் பொழிச்சலூர் ஊராட்சி கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.