தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டி சிறையிலிருந்து, சிறை காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.,

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று 27 ஆம் தேதி காலை 4 பேர், அடுத்த சில மணி நேரத்தில் ஒருவர், மலைப்பகுதியில் பதுங்கி இருந்த 8 பேர் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று தேனியில் வைத்து இருவர் என மொத்தம் 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.,

இந்நிலையில் தப்பி ஓடிய 17 பேரில் மீதமுள்ள மதுரையைச் சேர்ந்த அண்ணன் தம்பியான திருப்பதி, மீனாட்சிசுந்தரம் என்ற இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.,
இந்நிலையில் இருவரும் ஆண்டிபட்டி, உசிலம்பட்டி வழியாக இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுரை மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் அடிவார பகுதியில் உசிலம்பட்டி டிஎஸ்பி ஜெய்கணேசன் தலைமையிலான சுமார் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பேருந்துகள், கார்கள் மற்றும் லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் தீவரமாக சோதனை நடத்தி தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.,




