• Sun. Oct 25th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

சாத்தூரில் மண்டபத்தின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து விபத்து..,

ByK Kaliraj

Oct 25, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலுக்கு குருலிங்காபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் தனது குழந்தைகள் ஸ்ரீவிஜித் மற்றும் அஜித் ஆகியோருக்கு மொட்டை போடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது

இந்த விருந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த தங்கவேலின் உறவினர்கள் மண்பாத்தில் தங்கியிருந்த போது ஸ்ரீ விஜித் (4) அஜித் (2) மற்றும் சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவரது மகன் ரூத்வில் (4) ஆகிய 3 குழந்தைகள் மீது விருந்து மண்டபத்தின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததாக கூறப்படுகிறது

இதில் ரூத்வில் (4) என்ற குழந்தைக்கு பலத்த படுகாயம் மற்றும் மற்று இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து குழந்தைகளை சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

விருந்து வைபவத்திற்கு வந்திருந்த குழந்தை மீது விருந்து மண்டபத்தின் மேற்கூரை விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.