கோவையில் தனியார் மொபைல் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை திரிஷா ரோடு ஷோ சென்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

கோவை காந்திபுரம் நூறடி சாலையில் புதிதாக தனியார் மொபைல் திறப்பு விழாவிற்கு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை திரிஷா கடையை திறந்து வைத்தார்.
அவரது வருகையை அறிந்த ரசிகர்கள் பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கடை முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இருப்பினும் காவல்துறையினர் மற்றும் பவுன்சர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

திரிஷா கடைக்கு வருகை புரியும் பொழுது திரண்டு இருந்த ரசிகர்களும் பொதுமக்களும் திரிஷாவை காண்பதற்கு ஆர்வமுடன் முன்னேறி வந்ததால் அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பவுன்சர்கள் மற்றும் காவல் துறையினர் சிரமப்பட்டு தடுத்தனர்.
கடை திறப்பு விழாவை முடித்துக் கொண்டு புறப்படும் பொழுது நடிகை திரிஷா ரசிகர்களையும் பொது மக்களையும் பார்த்து கையசைத்து, Heart In சிம்பள் காண்பித்து சிலருக்கு கை கொடுத்து சுமார் 100 மீட்டர் தூரம் காருக்குள் இருந்தவாறு ரோடு ஷோ சென்றார்.

முன்னதாக அவர் ரசிகர்களிடம் பேச ஆசைப்பட்டு மைக்கில் பேசிய பொழுது மைக் வேலை செய்யாததால் பேசாமல் புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




