• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் மலை மீது இன்று வேல் எடுக்கும் திருவிழா -போலீசார் குவிப்பு..,

ByKalamegam Viswanathan

Oct 9, 2026

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் இன்று மலை மீது குமரனுக்கு வேல் எடுக்கும் விழா நடைபெற உள்ள நிலையில், மலைமீது சமையல் செய்வது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத விழாவாக மலை மீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலில், வேல் எடுக்கும் விழா நடைபெரும்.

மலை மேல் வேல் விழாவின் போது பாரம்பரியமாக கதம்ப சாதம் சமைத்து பக்தர்களுக்கு வழங்குவது ஆண்டாண்டு காலமாக வழக்கமாக இருந்து வருகிறது.

இதனிடையே, நேற்று மாலை 4 மணியளவில் தொல்லியல் துறை சார்பில் கோயில் நிர்வாகத்திற்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டதாகவும் அதில் மலை மீது யாரும் தீ எரிப்பது அது சம்பந்தமாக பொருட்கள் மற்றும் மலை மீது வைத்து சமையல் செய்ய அனுமதிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் திருப்பரங்குன்றம் பகுதியில் பரவிய நிலையில், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டதோடு, சமையல் செய்ய காய்கறிகளை தயார் செய்வதற்காக மலைக்கு சென்றவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியது.

திருப்பரங்குன்றம் கிராம மக்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது .இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோவில் முன்பு கிராம மக்கள் குவியத் தொடங்கி திருப்பரங்குன்றம் கோவில் துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் .

தொடர்ந்து கோவில் துணை ஆணையர் மற்றும் தெற்கு காவல் துணையானவர் ஆகியோரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் திருப்பரங்குன்றம் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

தொடர்ந்து கோயில் நிர்வாக அதிகாரி செல்வி திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் ஜெகநாதன், கோயில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்டோ கோவில் துணை ஆணையர் அலுவலகத்தில் கிராம மக்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர் .

நேற்று நள்ளிரவை கடந்தும் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில். இன்று காலை தொல்லியல் துறை அனுமதி வழங்கியவுடன் வழக்கம்போல் சமைத்துக் கொள்ளலாம் என கோவிலில் நிர்வாகம் மற்றும் காவல்துறை தெரிவித்த நிலையில் பொது மக்கள் கலைந்து சென்றனர்.

திருப்பரங்குன்றத்தில் இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி உள்ள பகுதிகளில்மதுரை தெற்கு காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்றுவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில்.தற்போது மலை மேல் வேளெடுக்கும் விழாவிலும் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது இதனால் திருப்பரங்குன்றம் பகுதி இரண்டு நாட்களாக தொடர்ந்து பதட்டமாகவும் பரபரப்பாகவும் காணப்படுகிறது.