மதுரை மாவட்டம் திருமங்கலம் தேவர் சிலை முன்பு, மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சிசார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக கோரி கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவருக்கு துணை போகும் மோடி மற்றும் அமித்ஷாவையும் பதவி விலக கோரி கண்டன குரல் எழுப்பினர். மோடி அரசே, மோசடி அரசே ,பதவி விலகு, பதவி விலகு என்ற கண்டன கோஷமிட்டு காங்கிரஸ் கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.




