மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாகவும் சாலையை ஆக்கிரமித்தும் கடைகள் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

குறிப்பாக சோழவந்தான் பேரூராட்சி 6 மற்றும் 8வது வார்டு ரயில்வே பீட்டர் ரோடு பகுதி மற்றும் தபால் அலுவலகம் பகுதி ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதி பெரிய கடை வீதி திரோபதி அம்மன் கோவில் பகுதி மார்க்கெட் ரோடு வட்ட பிள்ளையார் கோவில் மருது மகால் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்தும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்க்கு இடையூறாகவும் கடைகள் வைக்கப்பட்டு இருப்பாக கூறப்பட்டது.
இந்த நிலையில் பொதுமக்களின் புகாரை அடுத்து பேரூராட்சி 8வது வார்டு பகுதியில் உள்ள சத்திரம் நடுநிலைப்பள்ளி அருகில் சாலை மற்றும் தற்காலிக பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள் அகற்றப்பட்டது. பேரூராட்சி பணியாளர்கள் கடைகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்

செயல் அலுவலர் செல்வகுமார் துப்புரவு ஆய்வாளர் ஜெஸ்ஸி தலைமையில் பணியாளர்கள் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதே போல் சோழவந்தான் பேரூராட்சியின் மற்ற பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




