மதுரை மாநகர் W1 திருநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திருநகர் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் இருசக்கர வாகத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் சோதனையில் விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்த ஸ்ரீராம் கௌசிக் (வயது 26) லோகேஸ்வரன் (வயது 29) ஆகிய இருவர் கைது.
திருநகர் போலீசார் அவர்களிடமிருந்து சோதனை செய்ததில் 1013 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்.




