மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் 2009 ஆண்டுதொடங்கப்பட்டு இன்று வரை வாடகை கட்டிடத்தில் 3பணியாளர்களுடன் இயங்கி வருகிறது. இதில் புதிதாக ஓட்டுனர் உரிமம் எடுப்பவர்கள் வாகனம் ஓட்டி காண்பி க்கும்செய்முறை தேர்வு வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் அருகில் தனியாருக்கு சொந்தமான புளியந்தோப்பு பகுதியில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் பாதுகாப் பினை உறுதி செய்ய வழங்கப்படும் தகுதிச் சான்றி தழுக்கு சோதனை ஒட்டம் செய்வது உள்ளிட்ட பரிசோதனைகள் சாலை யோரம் தற்போது வரை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக எம். வீ. கருப்பையா இருந்தபோது வட்டார ப் போக்குவரத்து அலுவலகம் கட்டிட 2013ஆண்டு வாடிப்பட்டி ரயில் நிலையம் அருகில் அரசு புறம்போக்கு இடத் தை தேர்வு செய்து 2015ஆண்டு வருவாய் துறையில் இருந்து வட்டாரப் போக்குவரத்து துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

அதன் பின் பணி தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. 2020ஆண்டுபுதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.1 கோடியே 97 லட்சத்து 48 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பின்மதுரை பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ஆய்வில் ஓட்டுநர் தேர்வு தளம் மற்றும் இதர பணிகளுக்கு தோராயமாக ரூ.2 கோடி யே 99 லட்சத்து 48ஆயிரம் என்று கணக்கிடப்பட்டது.ஆனால் ஒதுக்கப் பட்ட நிதி போக மீதம் ரூ.1 கோடியே 2 லட்சம் தேவை ஏற்பட்டது.
ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் அந்த நிதியை ஒதுக்காமலேயே விட்டுவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக சோழவந் தான் தொகுதி எம்.எல்.ஏ., வான கருப்பையா 13 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் மீண்டும் உயிர் பெற்றுகட்டுமான பணி துவங்குவதற்கு இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் வட்டார போக்குவரத்து அலுவலர் சித்ரா, மோட்டார் வாகன ஆய்வாளர் முரளி, சூப்பிரண்டு மகேந்திரபாபு ஆகியோர் வந்திருந்த னர். மேலும் தற்போது வட்டார போக்கு வரத்து அலுவலகம் கட்டுவதற்கு தேவையான நிதியினை தமிழக முதல்வர் ஜோசப் விஜயிடம்பெற்று மக்களின் நலனில் அக்கறை இல்லாத கடந்த கால அரசுகளால் கிடப்பில் போடப்பட்ட பணியினை மாற்றம் அது முன்னேற்றம் என்பதைகுறிக்கோ ளாக கொண்ட மக்களின் முதல்வர் ஜோசப் விஜய் அரசால் விரைந்து பணியை தொடங்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.





