• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மகளிர்களுக்கான இலவச வெற்றிப் பயணம் பேருந்தில் பெயர் பலகையில் குளறுபடி..,

ByP.Thangapandi

Oct 7, 2026

தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து பயணமாக வெற்றிப் பயணித்திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்ட சூழலில்.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து டிஎன்:58, எண்:3207 என்ற எம்.கல்லுப்பட்டி வரை எழுமலை வழியாக வெற்றிப் பயணம் பேருந்து சென்றது.,

இந்த நிலையில் இந்தப் பேருந்தின் பின்பகுதியில் திருமங்கலம் வழியாக மண்டேலா நகர் என ஊரின் பெயர் குளறுபடியாக செல்வதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வழி தடத்தில் செல்கிறதா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பேருந்தின் முன் பகுதி மற்றும் பின் பகுதியில் ஊரின் பெயர்கள் டிஜிட்டலில் மாறி மாறி செல்வதால் பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.,