• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பிரேதத்தை கொண்டு செல்ல விடாமல் டிராக்டர் வாகனத்தை நிறுத்தி மறித்ததால் பரபரப்பு..,

ByK Kaliraj

Oct 7, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அன்னபூரணியாபுரம் கிராமத்தை சேர்ந்த பொன்னையா என்பவரது மனைவி குருவம்மாள் (வயது 66) வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இவரது உடலை வழக்கம் போல் பொது மயானத்திற்கு எடுத்து சென்றபோது அதே ஊரை சேர்ந்த மற்றொரு தரப்பினர் பொது பாதை தங்களது சொந்த பட்டா நிலம் என கூறி அந்த பாதையில் பிரேதத்தை கொண்டு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி டிராக்டர் வாகனத்தை நிறுத்தி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்து மண்டல துணை வட்டாட்சியர் பாண்டி, செவல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சீனிராஜ், வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ,ஆகியோர் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் இன்னும் ஒரு மாதத்தில் மயானத்தில் செல்ல நிரந்தரமான பாதை அமைக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பிரேதத்தை கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து உயிரிழந்தவரின் உடலை வழக்கம்போல் பொது பாதையில் கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர்.