• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

லாரி ஓட்டுநர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட மோதலில் கொலை 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது..,

ByP.Thangapandi

Oct 7, 2026

மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியில் காதலியின் தங்கையைத் தொந்தரவு செய்த வாலிபர் கொடூரக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று சிறார்கள் உட்பட ஏழு பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

​செக்கானூரணி காவல் எல்லைக்குட்பட்ட அய்யம்பட்டி பிரம்புமேடு பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கே.பாறைப்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அஜித் என்பவர் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உசிலம்பட்டி டிஎஸ்பி ஜெய்கணேஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

​விசாரணையில், தேங்கல்பட்டியைச் சேர்ந்த கர்ணன் என்பவர் தான் இந்தக் கொலையின் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது.

கர்ணனின் மூத்த மகளை அஜித் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்ததால் அந்தப் பெண் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

​ஆனால் மூத்த மகள் இறந்த துயரம் மாறுவதற்குள், அஜித்தின் பார்வை இரண்டாவது மகள் மீது திரும்பியுள்ளது. உன் அக்காள் தான் இறந்துவிட்டாள் நாமாவது சேர்ந்து வாழ்வோம் என அஜித் இரண்டாவது மகளை அவர் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

​இதைக் கண்டு ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், கடந்த எட்டு மாதங்களாக அஜித்தைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி வந்துள்ளனர்.

அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அய்யம்பட்டிக்கு வந்த அஜித்தைப் பின்தொடர்ந்து சென்று, கர்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் பயங்கர ஆயுதங்களால் அவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.

​இந்த வழக்கில் தேங்கல்பட்டியைச் சேர்ந்த கர்ணன், அவரது மனைவி சாந்தி, உறவினர்கள் கர்ணா, காசிபாண்டி மற்றும் மூன்று சிறார்கள் உட்பட ஏழு பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

​மூத்த மகள் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் தற்கொலை செய்துகொண்ட கூறப்பட்ட நிலையில்,

வாலிபர் தன் இரண்டாவது மகளுக்கும் காதல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரமடைந்த குடும்பத்தினரே அவரைத் தீர்த்துக்கட்டியுள்ள இந்தச் சம்பவம், செக்கானூரணி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.