மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக முதியோர் வாரம் முன்னிட்டு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் முதியோர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உரையாற்றி உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழியக்கம் அமைப்பின் பழனிச்சாமி, வானொலி அறிவிப்பாளர் டயானா, சமூக சேவகர்கள் இல.அமுதன், ரமேஷ்குமார், ஜவகர், நித்தீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதியோர்கள் மணிகண்டனிடம் தங்கள் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தனர்.





