செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை பாரதிபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் சுமார் 60 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு நிழல் மற்றும் பசுமை வழங்கி வந்த பழமையான அரசமரம் சாய்ந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, மக்களுக்கான மக்கள் இயக்கம் மற்றும் பசுமைத் தாயகம் சார்பில் மரத்திற்கு இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வில் பசுமைத் தாயகம் சார்பில் கண்ணன் கண்டனம் தெரிவித்தார். மக்களுக்கான மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் தி. கார்த்திக் கண்ணன்,

«“இந்த மரம் சாய்ந்ததற்கான காரணம் குறித்து அரசு நிர்வாகம் முழுமையான ஆய்வு நடத்த வேண்டும். மரத்தில் மருந்து வைக்கப்பட்டதா என்பது உள்ளிட்ட அனைத்து சாத்தியக்கூறுகளையும் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்”»
திருக்கோயில் தக்கார் சரவணகுமார் நிர்வாகம் செய்வதில்லை அவருக்கு பதிலாக பணி நிறைவு பெற்ற முன்னாள் அர்ச்சகர் சுந்தர் நிர்வாகம் செய்து வருகிறார். அதனால் செய்பவரே பொறுப்பாவார் அதன் அடிப்படையில் முன்னாள் அர்ச்சகர் சுந்தர் என்பவரை விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

எனக் கோரிக்கை விடுத்தார்.
மேலும், சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, மரத்தின் நிலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து அதிகாரப்பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்வில் மூத்த குடிமக்கள் நலச் சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம், ஆர்.எஸ்.எஸ். தலைவர் நரேந்திரன் ஜி, பாரதிபுரம் வீட்டு உரிமையாளர் பொதுநலச் சங்க செயலாளர் யோகி நேரு, இணைச் செயலாளர்கள் சந்தோஷ் குமார், மணிகண்டன் மற்றும் சமூக ஆர்வலர்கள் சரவணன், லயன் வரதன், துளசிதரன், லயன் ரியாஸ் அகமது, துளசி, முத்து, திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.




